நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்த எம்.பி ஹேமாமாலினி!
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அதன் ஒரு பகுதியாக இன்று நாடாளுமன்ற வளாகத்தை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அணுராக் தாகூர் ,எம்.பி ஹேமமாலினி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்தனர்.
மேலும் நாடாளுமன்ற வளாகத்தை பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த சில எம்.பிகளும் இந்த செயலில் ஈடுபட்டனர்.வளாகத்தை சுத்தம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ஹேமமாலினி அடுத்த வாரம் தனது தொகுதியான மதுராவிற்கு சென்று தூய்மை திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.
#WATCH Delhi: BJP MPs including Minister of State (Finance) Anurag Thakur and Hema Malini take part in 'Swachh Bharat Abhiyan' in Parliament premises. pic.twitter.com/JJJ6IEd0bg
— ANI (@ANI) July 13, 2019
நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்ததால் இந்த முயற்சிக்கு நாடாளுமன்ற சபாநாயகர் பாராட்டுகளை தெரிவித்தார் என கூறினார். ட்விட்டரில் #HemaMalini என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி எம்.பி ஹேமமாலினிக்கு பலர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.