மத்தியப் பிரதேசத்தில் அந்த மாநில முதல்வர் கமல்நாத் தலைமையில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக இன்று புதன்கிழமை பேரணி நடைபெற்றது. இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி அமல்படுத்தப்படாது என்பதை தெளிவுபடுத்திப் பேசிய அம்மாநில முதல்வர் கமல்நாத், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது பன்முகத்தன்மை கலாசாரத்தினால் உலகளவில் இந்தியா அறியப்படுகிறது. ஆனால், என்ஆர்சி என்பது இந்தியாவின் இந்தத் தனித்துவங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். நான் 40 ஆண்டுகளாக அரசியலில் எம்எல்ஏ-வாக உள்ளேன். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீது தாக்குதலைத் தொடுக்கும் சட்டங்களை நான் பார்த்ததே கிடையாது. தற்போது நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது. மக்கள் வேலைகளை இழக்கின்றனர். விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைப்பதில்லை. ஆனால், மத்திய அரசு இதில் கவனம் செலுத்தாமல், மக்களின் கவனத்தை என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மீது திருப்புகிறது. என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு மட்டுமே காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சியும் அதற்கு ஆதரவையே தெரிவிக்கிறது. ஆனால், அதை என்ஆர்சியுடன் இணைக்கக் கூடாது” என்றார். மேலும், என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் முதலில் அதில் என்ன இருக்கிறது என்பதைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்குப் பதிலளித்த முதல்வர் கமல்நாத், “மோடி எங்களைப் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைக்கிறாரா? என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பின்னணியில் இருக்கும் அனைத்துத் திட்டங்களும், உள்நோக்கமும் எங்களுக்கும் தெரியும்” என்றார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…