தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள்… 2 முக்கிய அதிகாரிகளை அதிரடியாய் சஸ்பெண்ட் செய்த ம.பி முதல்வர்.!
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கடமையை சரியாக செய்யாததாக கூறி இரண்டு அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அலட்சியமாக இருந்ததாகக் கூறி ஷிவ்புரியின் தலைமை முனிசிபல் அதிகாரி (CMO) ஷைலேஷ் அவஸ்தியையையும், பிச்சோரின் ஜூனியர் உணவு அதிகாரி நரேஷ் மஞ்சி ஆகியோரை சஸ்பெண்ட் செய்வதாக கூறினார்.
அவர் கூறுகையில், ‘ நல்ல பணி செய்யும் அதிகாரிகளை நான் அரவணைப்பேன், ஆனால், தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை பொறுத்துக்கொள்ள மாட்டேன்.’ எனவும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.