தன் மகனுடன் தேர்வு எழுதி தாய் ! 10 வகுப்பு தேர்வில் இருவருமே வெற்றி
ஒடிசாவில் சார்ந்த பசந்தி முதுலி என்ற 36 வயது பெண் ஒருவர் அங்கன் வாடியில் பணியாளர்கள் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 18 வருடங்களுக்கு முன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது இவரது பெற்றோர்கள் பசந்திக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
இதனால் இவரது படிப்பு பாதியில் நின்றது .பின்னர் குழந்தை பிறந்தாலும் கூட பத்தாம் வகுப்பு படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் பசந்திக்கு இருந்தது. இந்நிலையில் தனது மகன் பத்தாம் வகுப்பு சென்று கொண்டிருந்தார்.அதனால் தன் மகனோடு சேர்ந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என பசந்தி முடிவு செய்தார்.
தன் மகனுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்ததை அப்படியே வீட்டில் வந்து தன் தாய்க்கும் சொல்லிக் கொடுத்து உதவி வந்தார். இதனால் இருவருமே பத்தாம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பசந்தி 203 மதிப்பெண்கள் எடுத்தும் அவரது மகன் 340 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றனர்.
தேர்வில் வெற்றி பெற்றதை தெரிந்த பசந்தி ஆனந்த கண்ணீர் வடித்தார்.மேலும் தற்போது பணி புரியும் அங்கன்வாடியில் பணி உயர்வு கிடைக்கும் என நம்பிக்கையுடன் பசந்தி தெரிவித்தார்.