ஆந்திராவில் இரண்டு வயது குழந்தையை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் அக்குழந்தையின் தாய்.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தர்மவரம் என்ற பகுதி. இப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசலு(35), இவரது மனைவி மீனாட்சி(29). இவர்களின் குழந்தைகள் தனுஸ்ரீ(6), பிரணீதா(2). குடும்பத்தில் பணப்பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை ஸ்ரீனிவாசலு வேலைக்காக சென்றுள்ளார். மூத்த மகள் தனுஸ்ரீ தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். தாயும் இரண்டு வயது குழந்தை மட்டுமே தனியாக இருந்துள்ளனர். அப்போது மீனாட்சி தனது குழந்தையின் கையை அறுத்துவிட்டு, அவரது கையையும் அறுத்துள்ளார். பின்னர் மீனாட்சி தற்கொலை செய்வதற்காக தூக்கிட்டுக்கொண்டுள்ளார்.
இதனை அடுத்து வீடு வெகுநேரமாக கதவு மூடியிருப்பதால் அருகில் உள்ளவர்கள் 12.30 மணியளவில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது மீனாட்சி உயிருடன் இருந்துள்ளார், உடனடியாக காவல்துறைக்கு தகவல் செய்துள்ளனர். ஆனால், கவலைக்கிடமாக 2 வயது பிரணீதா இறந்து கிடந்துள்ளார்.
பிறகு அனந்தபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மீனாட்சி சிகிச்சை பெற்று அவரது உடல் சீராகியுள்ளது. இந்நிலையில் 2 வயது மகளை கொன்றதற்காகவும், தற்கொலைக்கு முயன்றதாலும் மீனாட்சி மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…