உத்தரபிரதேசத்தில் தாய் மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி மகனை கடைக்கு அனுப்பி உள்ளார். பின்னர் மகன் புதுமனைவியுடன் வந்ததால் தாய் அதிர்ச்சியடைந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் ஹூடு . இவர், சுவேதா என்ற பெண்ணை 2 மாதத்திற்கு முன் யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கொரோனா காரணமாக திருமணத்திற்கான சான்றிதழை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சுவேதாவை டெல்லியில் ஒரு வீட்டை வாடகை வீட்டில் தங்க வைத்தார்.
இந்நிலையில், சுவேதா தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் திடீரென அவரை வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தி உள்ளார்.இது குறித்து தனது கணவரிடம் சுவேதா கூறினார். இதைத்தொடர்ந்து, காசியாபாத்தில் வீட்டில் இருந்த ஹூடுவை நேற்று அவரது தாய் மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பி உள்ளார்.
இந்த, சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஹூடு சுவேதாவை காசியாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். தனக்கு தெரியாமல் மகன் திருமணம் செய்துகொண்டதால் தனது மகனையும், சுவேதாவையும் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என கூறி ஹூடு தாய் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார், இருவரையும் அனுமதிக்கும்படி ஹூடு தாயிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் முடியாது என கூறியதால் தற்காலிகமாக இருவரும் டெல்லியில் உள்ள வாடகை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தி போலீசார் பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…