தாயும், சேயும் நலம்.! ஓடும் ரயிலிலே பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவர்.!
- தேசம்தான் முதலில், நாங்கள் இருக்கிறோம் இந்திய ராணுவத்தின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஹவுரா எக்ஸ்பிரஸீல் ராணுவ மருத்துவர்களின் உதவியால் பெண்ணுக்கு ஓடும் ரயிலிலே குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.
தேசம்தான் முதலில், நாங்கள் இருக்கிறோம் இந்திய ராணுவத்தின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் இரண்டு பெண் மருத்துவர்களும் அவர்கள் ஆற்றிய சேவை தான். ரயில் பயணங்களில் பெண்கள், வயதானவர்களின் முதல் அதிகமாக இருப்பார்கள். அதில் பாதுகாப்பான பயணத்துக்கு நிறைய வசதிகள் இருப்பதால், ரயில் பயணங்கள் முதல் முடிவாக இருக்கிறது. அப்படித்தான் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணிப் பெண் பயணம் செய்துகொண்டிருந்தார். இன்னும் சில நாள்களில் குழந்தை பிறந்துவிடும் என்ற நிலையில் அவர் ரயில் பயணம் செய்துள்ளார்.
பின்னர் ரயில் புறப்பட்ட சில மணி நேரங்களில் அந்தப் பெண்ணுக்கு நடுவழியில் பிரசவ வலி ஏற்பட்டதால் உடனிருந்தவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயிலும் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டிருந்தது. அருகில் உள்ள ரயில் நிலையத்தைச் சென்றடைய நேரம் பிடிக்கும் என்பதால் அங்கு சற்று பரபரப்பு நிலவியது. நல்ல வேளையாக அந்தப் பெட்டியில் ராணுவ மருத்துவர்களான கேப்டன் லலிதா, கேப்டன் அமன்தீப் இருவரும் பயணம் செய்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் இந்தத் தகவல் கிடைக்க உடனடியாகப் பிரசவம் பார்ப்பதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
Captain Lalitha & Captain Amandeep, #IndianArmy 172 Military Hospital, facilitated in premature delivery of a passenger while traveling on Howrah Express.
Both mother & baby are hale & hearty.#NationFirst#WeCare pic.twitter.com/AFQGybwJJ6— ADG PI – INDIAN ARMY (@adgpi) December 28, 2019
அதை தொடர்ந்து மருத்துவர்களின் உதவியால் அந்தப் பெண்ணுக்கு ஓடும் ரயிலிலே குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். இதுதொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய ராணுவம், பெண் மருத்துவர்களின் செயலைப் பாராட்டியுள்ளது. இந்திய ராணுவத்தை நினைத்து பெருமைப்படுவதாக ட்விட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண்ணுக்கு ராணுவ மருத்துவர்கள் இருவரும் பிரசவம் பார்த்த சம்பவம் ராணுவத்தினர் மீதான மரியாதையை மேலும் அர்ஹிகரித்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.