உத்திரபிரதேசத்தில் ஒரு இளைஞரை இரண்டு துண்டாக வெட்டிய கோர சம்பவம் நிகழந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ரயில் பாதையில் மர்மமான முறையில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் இறந்தவரின் உடலை காவல்துறையினர் கண்டெடுத்தனர். இந்த சம்பவம் குறித்து நடந்த விசாரணையில் இறந்தவர் அஸ்ஸாமைச் சேர்ந்த துட்டன் துன்ற இளைஞர் என்று போலீசார் அடையாளம் கண்டனர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், அஸ்ஸாமைச் சேர்ந்த துட்டன் என்ற இளைஞர் லும்டிங்கில் உள்ள ஹதிபங்கா காலனியில் வசிக்கிறார்.
இவர் ரயிலில் உள்ள குளிர்சாதன அறைகளில் படுக்கை வசதிகளை செய்து கொடுக்கும் பணியாளராக பணிபுரிந்தார். மார்ச் 1 அன்று, லும்டிங்கில் இருந்து திப்ருகருக்கு ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மார்ச் 2ம் தேதி திப்ருகார்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் படுக்கை வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாக தெரிவித்தனர்.
துட்டன் கொல்லப்படுவதற்கு முன் தனது தாயைத் தொடர்புகொண்டு, “அம்மா, தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். என்னைக் கொல்லப் போகிறார்கள். நான் உன்னை மீண்டும் பார்க்க முடியாது. தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்” என்று கூறியுள்ளார். இதையடுத்து குற்றவாளிகளை அடையாளம் காணவும், கைது செய்யவும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…