நாட்டிலுள்ள அனைத்து பயங்கரவாதிகளுக்கும் தாய் மம்தா – பாஜக எம்பி சௌமித்ரா கான்!
நாட்டிலுள்ள அனைத்து பயங்கரவாதிகளுக்கும் தாய் முதல்வர் மம்தா பானர்ஜி தான் என பாஜக எம்பி சௌமித்ரா கான் கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை 15 கிலோ மீட்டரில் இருந்து 50 கிலோ மீட்டராக விரிவுபடுத்த கூடிய மத்திய அரசின் நடவடிக்கையில் தலையிட்டு வாபஸ் பெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இந்த கடிதம் தொடர்பாக பாஜக எம்.பி சௌமித்ரா கான் மம்தா பானர்ஜியை கடுமையாக சாடியுள்ளார். அப்பொழுது மேற்கு வங்க முதல்வர் இந்தியாவை தர்மசாலையாக மாற்ற முயற்சிப்பதாக கூறியுள்ளார். ஏனென்றால் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதும் அவர் அதை எதிர்க்க தான் செய்தார் என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மக்கள் யாரும் அவருக்கு செவி சாய்க்க வேண்டாம். ஏனென்றால் மேற்கு வங்கத்தை அழித்த அதே வழியில் மொத்த நாட்டையும் அவர் அழிக்க விரும்புகிறார் எனவும், நாட்டில் உள்ள அனைத்து பயங்கரவாதிகளுக்கும் அவர் அரசியல் தாய் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.