6 வயது மகனை கழுத்தை அறுத்து கொன்ற தாய் – கடவுள் உத்தரவால் கொலை செய்ததாக வாக்குமூலம்!

Default Image

தனது 6 வயது மகனை குளியலறைக்குள் தூக்கி சென்று கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அவன் சிறிது நேரத்தில் உயிர் பெறுவான் எனவும், கடவுள் உத்தரவால் தான் இவ்வாறு செய்ததாகவும் மகனின் தாய் சஹீதா கூறியுள்ளார். 

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு அருகே உள்ள பூலகாட் எனும் பகுதியை சேர்ந்த சுலைமான் சஹீதா ஆகிய தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அருகிலுள்ள மதரசாவில் சஹீதா ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறாராம். இந்நிலையில், மீண்டும் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் சஹீதாவிற்கு கடந்த சில நாட்களாக தோஷம் இருந்ததாகவும், இதனால் அடிக்கடி சோர்வாகவும் மந்தமாகவும் இருந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் தனது 6 வயது மகனை நரபலி கொடுத்தால் தனது தோஷம் நீங்கி அதன்பின் சிறிது நேரத்தில் மகன் உயிருடனும் வந்துவிடுவான் என சஹீதாவிற்கு கனவு ஒன்று வந்ததாம்.

இதையடுத்து தனது கணவர் மற்றும் இரண்டு மகன்கள் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நேற்று அதிகாலை 4 மணியளவில் தனது 6 வயது மகனை குளியலறைக்குள் தூக்கி சென்று கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் சஹீதா. அதன்பின் பாலக்காடு தெற்கு காவல் நிலைய போலீசாரை தொடர்பு கொண்டு தனது மகனை கொலை செய்து விட்டதாகவும் அவரே கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடனடியாக கைது செய்து விசாரித்தனர். அப்பொழுது கடவுளின் உத்தரவின் பேரில் தான் தனது மகனை கொலை செய்ததாகவும், இன்னும் சிறிது நேரத்தில் தனது மகன் உயிர் பெற்று விடுவார் எனவும் கூறியுள்ளார். பெட்ரா தாயே மகனை கொலை செய்துவிட்டு, போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளதுடன் இன்னும் சிறிது நேரத்தில் உயிர் பெறுவான் என இரத்த வெள்ளத்தில் கிடைக்கும் மகனை பார்த்து கூறும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்