மும்பை செல்லும் தனது கனவை நினைவாக்க பெற்ற குழந்தையை 45,000 ரூபாய்க்கு விற்ற தாய் கைது!

Default Image

தன் கனவை நனவாக்க இரண்டு மாதங்களே ஆன குழந்தையை 45,000  ரூபாய்க்கு விற்க முயன்ற பெண்மணி கைது.

ஹைதராபாத்தில் உள்ள ஹபீப் நகர் எனும் காவல்நிலையத்தில் பெற்ற ஒரு குழந்தையை பெண்மணி விற்பனை செய்ய போவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் காவலர்கள் விரைந்து இதுகுறித்து விசாரணை நடத்தியதில், ஹைதராபாத்தில் உள்ள 22 வயதான பெண் ஒருவர் தான் பெற்று இரண்டு மாதங்களே ஆன மகனை மும்பை செல்லக்கூடிய தனது கனவை நனவாக்குவதற்கு 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றது தெரிய வந்துள்ளது. உடனடியாக குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குழந்தையை விற்க முயன்ற தாயை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில், நீண்ட காலமாக மும்பைக்கு செல்ல விரும்பிய அவர் குழந்தையை தனியாக வளர்ப்பதில் சிரமங்களை சந்தித்திருக்கிறார். செவ்வாய்கிழமை அன்று அக்குழந்தையின் தந்தை அப்துல் மஜீத் என்பவர் தனது மனைவி மகனை விற்க முயற்சிக்கிறார் என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். சிறுவனை 45,000 க்கு வாங்க முயன்ற குடும்பத்தினர் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுவனை காவல்துறையினர் அவனின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்