நான்காவது திருமணத்திற்கு தடையாக இருந்த தன் மகனை குளத்தில் மூழ்கடித்து தாய் கொலை செய்தார்.
பிகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தர்மசீலா தேவி (வயது 23) இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அருண் என்பவரை திருமணம் செய்தார்.இந்த தம்பதிகளுக்கு பார்வையற்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் திருமணமாகிய ஒரே வருடத்தில் கணவரைப் பிரிந்து வேறொரு நபரை திருமணம் செய்தார் தேவி. 2வது திருமணம் செய்த அவர் திடீரென்று உயிரிழந்ததால் தேவி மகேஷ் செளதிரி என்பவரை 3வதாக மணந்தார். ஆனால் அவரும் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.
இதை அடுத்து, நான்காவதாக திருமணம் செய்து கொள்ள நினைத்த தேவி, தனது 4 வயது மகனை அருகில் உள்ள குளத்தில் மூழ்கடித்து அந்த பார்வையில்லாத பிஞ்சை நெஞ்சில் கொஞ்சமும் கருணையின்றி கொலை செய்து உள்ளார்.
இந்நிலையில் முதல் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தேவியை கைது செய்து விசாரித்ததில், குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாக காவல் அதிகாரி அமரேந்திர குமார் தகவல் தெரிவித்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…