உத்திரபிரதேச சிறையில் உள்ள கைதிகளில் அதிகமானோர் படித்த பட்டதாரிகளே!
உத்திரபிரதேச சிறையில் உள்ள கைதிகளில் அதிகமானோர் படித்த பட்டதாரிகள்.
உத்திர பிரதேசத்தில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளில் அதிகமானோர் படித்த பட்டாதாரிகள் தான் உள்ளதாக தேசிய குற்றப் பதிவு பணியகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உத்திர பிரதேச சிறையில், பொறியியல் மற்றும் முதுக்கலை பட்டம் பெற்ற கைதிகள் தான் அதிகமாக உள்ளனர்.
உத்திரபிரதேசத்தை தொடர்ந்து அடுத்தபடியாக, மஹாராஷ்டிராவில் உள்ள சிறையில் தான் அதிகமான பட்டதாரிகள் உள்ளனர். மேலும், மூன்றாவது இடத்தில கர்நாடக சிறையில், அதிகப்படியான படித்த பட்டதாரிகள் சிறையில் உள்ளனர். தொழில்நுட்ப பட்டம் அல்லது பொறியியல் துறையில் டிப்ளோமா பெற்ற 3,740 கைதிகளில், 727 பேர் உத்தரபிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைகள் பொறியியல் பட்டம் பெற்ற 495 கைதிகள்உள்ளனர். கர்நாடக சிறைகளில் 362 கைதிகள் உள்ளனர். நாடு முழுவதும் முதுகலை பட்டம் பெற்ற மொத்தம் 5,282 பேர் கைதிகளாக சிறையில் உள்ள நிலையில், உ.பி. சிறையில் 2,010 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.