“இந்திய விமானங்களில் கொசுக்கள்” பயணிகளுக்கு இழப்பீடு..!!
விமானத்தில் கொசுக்கள்… பயணிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
இந்தியா:
விமானத்தில் கொசுக்கள் இருந்ததாக புகார் கொடுத்த பயணிகள் மூவருக்கும், ஆளுக்கு சுமார் 800 வெள்ளி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அமிர்தசரஸ் பயனீட்டாளர் குறைதீர் நிலையம் உத்தரவிட்டுள்ளது.
வழக்குரைஞராக இருக்கும் பயணிகள் மூவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலையம் அவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் டில்லி விமான நிலையத்திலிருந்து அமிர்தசரஸ் சென்ற IndiGo விமானத்தில் கொசுக்கள் மொய்த்தததாக வழக்குரைஞர்களான பயணிகள் மூவரும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் அதைக் கண்டு கொள்ளவில்லை.
அதிகாரிகளின் அசட்டுத்தனம் வழக்குரைஞர்களுக்குப் பெருத்த ஏமாற்றமளித்தது. அவர்கள் மூவரும் Indigo நிறுவனத்தின் மீது அமிர்தசரஸ் பயனீட்டாளர் குறைதீர் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
விமானத்தில் பூச்சிகள் நுழைவதைத் தடுக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. என்றாலும், பூச்சிகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று Indigo நிறுவனம் பதிலளித்திருந்தது.
அது திருப்தியளிக்கவில்லை என்று பயனீட்டாளர் குறைதீர் நிலையம் கூறியது.
Indigo நிறுவனமும், இந்திய விமானத்துறை ஆணையமும் புகார் கொடுத்த வழக்குரைஞர்களின் வழக்குச் செலவுக் கணக்கில் 300 வெள்ளி வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்றும் பயனீட்டாளர் குறைதீர் நிலையம் உத்தரவிட்டுள்ளது.
DINASUVADU