காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,மாவட்ட நிா்வாகம் சாா்பில்,மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,அது காலராவுக்கான அறிகுறியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில்,கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு,மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் காலரா நோய் பரவும் அபாயம் இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,காரைக்கால் மாவட்டத்தை “பொது சுகாதார அவசர நிலையாக” புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக,புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”
“புதுச்சேரியைச் சேர்ந்த சுகாதாரக் குழுவின் ஒருங்கிணைப்புடனும், நகராட்சி,பொதுப்பணித்துறை போன்ற துறைகளின் ஒருங்கிணைப்புடனும் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.ஒருங்கிணைப்புக் குழுக்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள்/SOPகள் வழங்கப்படுகின்றன.
பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும்,பின்வருவனவற்றைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:
மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுவது நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும்.சுகாதார அதிகாரிகளிடம் முன்கூட்டியே புகார் அளித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…