இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், இதுவரை 13,691,627 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 586,821 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 970,169 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24,929 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 613,735 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் இந்த வைரஸ் பாதிப்பால் 614 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.