டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Delhi schools Bomb threat

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது.

டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு (டெல்லியில் 60, நொய்டாவில் 1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மிரட்டல் இமெயில்களை தொடர்ந்து, டெல்லி போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பள்ளி மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னர், வெடிகுண்டு தேடுதல் குழுவினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அனைத்து பள்ளிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் சந்தேகப்படும்படியாகவோ, பயப்படும் வகையிலோ எந்தவித பொருளும் கிடைக்கவில்லை என்று டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து பெற்றோர்கள் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இது வெறும் புரளி என்றும் இந்த போலியான மிரட்டலை விடுத்தது யார் என்ற விசாரணை நடைபெற்று வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியது யார் என்பது குறித்து சைபைர் கிரைம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி, சாணக்யபுரியில் உள்ள சமஸ்கிருதி பள்ளி, கிழக்கு டெல்லியில் உள்ள மயூர் விஹாரில் உள்ள மதர் மேரி பள்ளி, துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று அதிகாலை இமெயில் மிரட்டல் வந்துள்ளது. அதன்பிறகுகே பள்ளி வளாகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறி, 60 பள்ளிகளுக்கும் இதேபோன்ற மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்