எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.
ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை.இந்நிலையில் முதலமைச்சரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அதிருப்தியடைந்தார்.
இதனால் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டார். அதேபோல் கிரண்பேடியை கண்டித்து 6 மணிநேரத்துக்கும் மேலாக நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.தர்ணாவில் இருந்துகொண்டே கோப்புகளில் கையெழுத்தும் செய்து வருகிறார்.
மேலும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.தங்களுடைய கோரிக்கை தொடர்பாக 6-ம் தேதி கடிதம் கொடுத்துள்ளோம் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…