50,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள்…! 186 ஜிபி டேட்டா…..! சிறுவன் உருவாக்கிய நிலவின் முப்பரிமாண புகைப்படம்…!

Default Image

நிலவின் முப்பரிமாண புகைப்படத்தை உருவாக்கிய சிறுவன். 

இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த பிரதமேஷ் ஜாஜூ பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனாவால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தன்னிடமிருந்த டெலஸ்கோப்பில் நிலாவை படங்கள் எடுத்துள்ளார். அப்படி எடுக்கப்பட்ட சுமார் 55,000 படங்களை இணைத்து  50 எம்பி அளவில் ஒரே புகைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படத்தை 186 ஜிபி டேட்டா தேவைப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த சிறுவன் கூறுகையில், முதலில் நான் நிலாவின் சிறு சிறு பகுதிகளை பலகோணங்களில் வீடியோ பதிவு செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு வீடியோவும் 2000 ஃப்ரேம்கள் கொண்டவை. இப்படி மொத்தம் 38 வீடியோக்களை எடுத்தேன். இந்த வீடியோக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, ஒரே படமாக உருவாக்கினேன். இந்த படங்களை எடுக்க நான்கு மணிநேரம் தேவைப்பட்டது. அவற்றை ஒழுங்கு முறைப்படுத்த மூன்று நாட்கள் ஆனது. இந்த முப்பரிமாண படத்தை அவர் உருவாக்க அதிக புகைப்படங்களை இயக்கும் போது தனது லேப்டாப் கிட்டத்தட்ட பாழாகிவிட்டது” என தெரிவித்துள்ளார்.

அதிக ரெசல்யூசன் கொண்ட இந்த புகைப்படம் சிறப்பான முறையில் தெரிகிறது. இந்த படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை பிரதமேஷ் ஜாஜூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். புகைப்படம் சிறுவனின் ரெடிட் அக்கவுண்டிலும் பகிரப்பட்டு இருக்கிறது. சிறுவன் உருவாக்கிய இந்த முப்பரிமாண புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்