இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 16,418,867 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 652,256 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,047,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பில், உலக அளவில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 1,436,019 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32,812 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 50,525 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 716 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025