இதுவரை இந்தியாவில் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – மத்திய அரசு!
இதுவரையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டது. அதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், கோவிஷீல்ட் எனும் தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி இந்தியாவில் போடுவதற்கான பணிகள் துவங்கப்பட்டது.
இதனையடுத்து முன்கள வீரர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், இதுவரை இந்த கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு போடப்பட்டு உள்ளதாகவும் இன்னும் வேகமாக மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த பணிகளை துரிதப்படுத்துமாறு மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.