கர்நாடகாவில் வெள்ள அபாயம் காரணமாக 35,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்.!

Default Image

கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக கலாபுராகி, விஜயபுரா, யாத்கீர் மற்றும் ரைச்சூர் மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

மேலும், பீமா நதி தொடர்ந்து அபாயக் குறியீட்டிற்கு மேலே தாண்டியதால் வெள்ள ஏற்பட அபாயம் இருப்பதன் காரணமாக 35,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் அதிகாரிகள், வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் 97 கிராமங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

மீட்பு படை வீரர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 36,290 பேர் வெளியேற்றிய பின்பு 174 நிவாரண முகாம்களில்  பாதுகாப்பாக இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பெங்களூரில் நேற்று இரவு முதல் பெய்த பலத்த மழையால் சில இடங்களில் நீர் தேங்கியது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்