பிபார்ஜாய் புயல் காரணமாக 30,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்..!
பிபார்ஜாய் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் 30,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட பிபார் ஜாய் புயல், சௌராஷ்டிரா, கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் உள்ள ஜகாவ் துறைமுகத்திற்கு அருகே, 15ம் தேதி மிக தீவிர புயலாக மாறி, 150 கிமீ வேகத்தில் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இதில் ஏற்படும் சேதம் மற்றும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு, குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ஜக்காவ் துறைமுகத்திற்கு அருகே, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள என்டிஆர்எப் மற்றும் எஸ்டிஆர்எப் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கடற்கரையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மக்களை வெளியேற்ற மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.