குஜராத்தில் 30,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டம்..!

Default Image

மூன்று ஆண்டு முதுகலை படிப்பை முடித்த பின்னர் ஆயுர்வேத மருத்துவர்கள் சில அறுவை சிகிச்சைகள் செய்ய அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

ஆயுர்வேத மருத்துவர்கள் சில அறுவை சிகிச்சை முறைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் மத்திய இந்திய மருத்துவ கவுன்சில் (சிசிஐஎம்) கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் உள்பட பெரும்பாலான மருத்துவர்கள் இந்த அறிவிப்பை திரும்பப் பெற கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குஜராத்தைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், அகமதாபாத்தைச் சேர்ந்த 9,000 மருத்துவர்கள் ஆகும்.

இருப்பினும், விபத்து, அவசர அறுவை சிகிச்சைகள், ஐ.சி.யூ மற்றும் சிக்கலான பராமரிப்பு சேவை உள்ளிட்ட அவசர சேவைகள் வழங்குபட்டு வருவதாக ஐ.எம்.ஏ (குஜராத் கிளை) செயலாளர் டாக்டர் கமலேஷ் சைனி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்