பாதுகாப்பிற்காக அண்டைநாட்டுக்குச் சென்ற 200க்கும் மேற்பட்ட மக்கள் மாநிலம் திரும்பினர்.! மணிப்பூர் முதல்வர்..!
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல்களில் 160 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
தற்பொழுது, இந்த கலவரத்தில் இருந்து தப்பிக்க அண்டை நாடான மியான்மருக்குச் சென்ற 200க்கும் மேற்பட்ட மக்கள் 3 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மாநிலம் திரும்பியுள்ளனர் என்று மாநில முதல்வர் என் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கு ராணுவத்தினர் செய்த அனைத்து முயற்சிகளை அவர் பாராட்டினார்.