18-44 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி…! கடந்த 24 மணி நேரத்தில் 2.15 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்….!

Published by
லீனா

கடந்த 24 மணி நேரத்தில் 18-44 வயதுக்குட்பட்ட 2.15 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். 

கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. அந்த  வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது.

இந்தியாவில் தினசரி 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிற நிலையில், மே-1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 2,15,185 பேர், கடந்த 24 மணி நேரத்தில் முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் செலுத்திக் கொண்டதாக  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குஜராத் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிக அளவில்  ஒட்டுமொத்தமாக செலுத்திக் கொண்டனர். குஜராத் -1,08,188 , ராஜஸ்தான் – 75,817, மகாராஷ்டிரா – 73,455, ஹரியானா  54,946, சத்தீஸ்கர்- 1,025, டெல்லி – 39,799, ஹரியானா – 54,946, ஜம்மு-காஷ்மீர் – 5,562, கர்நாடகா – 2,353, ஒடிசா – 6,311, பஞ்சாப் – 635, தமிழ்நாடு – 2,521, மற்றும் உத்தரப்பிரதேசம் 33,242 தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.  நாடு முழுவதும், 15,88,71,435 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில்,  டெல்லி, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் உட்பட 13 மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், பீகார், ராஜஸ்தான், ஹரியானா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், தினசரி நோய்தொற்று அதிகரித்து வருகிறது.

Published by
லீனா

Recent Posts

BGT தொடர் தோல்வி… ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

BGT தொடர் தோல்வி… ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…

53 seconds ago

இனிமே ஹீரோவாதான் நடிப்பேன்! ஆதங்கத்துடன் முடிவை கூறிய கலையரசன்!

சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…

30 minutes ago

சவுதி அரேபியாவை திருப்பி போட்ட பேய் மழை.. வெள்ளத்தில் மிதக்கும் மெக்கா.!

மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…

1 hour ago

திமுக கொடியில் இருக்கும் கருப்பை நீக்க முடியுமா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!

சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…

1 hour ago

நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 30க்கும் மேற்பட்டோர் பலி!

டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…

2 hours ago

மறைந்த தலைவர்களுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்… சட்டசபை ஒத்திவைப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…

2 hours ago