18-44 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி…! கடந்த 24 மணி நேரத்தில் 2.15 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்….!
கடந்த 24 மணி நேரத்தில் 18-44 வயதுக்குட்பட்ட 2.15 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.
கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது.
இந்தியாவில் தினசரி 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிற நிலையில், மே-1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 2,15,185 பேர், கடந்த 24 மணி நேரத்தில் முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் செலுத்திக் கொண்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குஜராத் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிக அளவில் ஒட்டுமொத்தமாக செலுத்திக் கொண்டனர். குஜராத் -1,08,188 , ராஜஸ்தான் – 75,817, மகாராஷ்டிரா – 73,455, ஹரியானா 54,946, சத்தீஸ்கர்- 1,025, டெல்லி – 39,799, ஹரியானா – 54,946, ஜம்மு-காஷ்மீர் – 5,562, கர்நாடகா – 2,353, ஒடிசா – 6,311, பஞ்சாப் – 635, தமிழ்நாடு – 2,521, மற்றும் உத்தரப்பிரதேசம் 33,242 தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நாடு முழுவதும், 15,88,71,435 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், டெல்லி, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் உட்பட 13 மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், பீகார், ராஜஸ்தான், ஹரியானா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், தினசரி நோய்தொற்று அதிகரித்து வருகிறது.