கடந்த நான்கு மாதங்களில் இந்தியா 18,006 டன் கொரோனா மருத்துவ கழிவுகளை உற்பத்தி செய்துள்ளது.
அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,587 டன் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு தெரிவிக்கிறது. செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 5,500 டன் கொரோனா கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இது, ஒரு மாதத்திற்கு அதிகபட்சம்.
மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஜூன் முதல், அனைத்து மாநிலங்களும் 18,006 டன் கொரோனா தொடர்பான உயிரியல் மருத்துவக் கழிவுகளை உற்பத்தி செய்துள்ளன. அவை, பொதுவாக உயிரியல் கழிவு சுத்திகரிப்பு வசதிகளால் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.
கொரோனா மருத்துவ கழிவுகள்:-
கொரோனா கழிவுகளில் பிபிஇ கருவிகள்,முகக்கவசங்கள், கையுறைகள், பிபிஇ கிட் போன்ற , காட்டன் ஸ்வாப்ஸ், இரத்தம் அல்லது உடல் திரவத்தால் மாசுபட்ட படுக்கைகள், இரத்த பைகள், ஊசிகள், சிரிஞ்ச்கள் ஆகியவை அடங்கும்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி:-
ஜூன் முதல் நான்கு மாதங்களில் மகாராஷ்டிராவில் 3,587 டன் கொரோனா கழிவுகளை உற்பத்தி செய்தது, அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு (1,737 டன்), குஜராத் (1,638 டன்), கேரளா (1,516 டன்), உத்தரபிரதேசம் (1,432 டன்), டெல்லி ( 1,400 டன்), கர்நாடகா (1,380 டன்), மேற்கு வங்கம் (1,000 டன்) உள்ளன.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…