வரும் 17-ஆம் தேதி 4-வது முறையாக ஆன்லைன் மூலமாக பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, அவர் எங்கு சென்றாலும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பரிசுகளை வழங்குவது உண்டு. அந்த வகையில், பிரதமர் மோடி அவர்கள் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன.
ஏற்கனவே 3 தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ள நிலையில், வரும் 17-ஆம் தேதி 4-வது முறையாக ஆன்லைன் மூலமாக பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. வரும் 17-ஆம் தேதி தொடங்கும் ஏலம், அக்டோபர் 2-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த ஏலத்தில், அரசியல் பிரபலங்கள் அளித்த பரிசுகள் உட்பட, டி-சர்ட், குத்துச்சண்டை கையுறைகள், ஈட்டி, பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் கையெழுத்திட்ட டென்னிஸ் மட்டை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கைவினை பொருட்கள், பாரம்பரிய அங்கவஸ்திரம், சால்வை, தலைப்பாகை, வாள் ஆகியவையும் ஏலத்தில் விடப்பட உள்ளது. பரிசு பொருட்களின் ஆரம்ப விலை ரூ.100 முதல் ரூ.10 லட்சம்வரை ஏலத்தில் விடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…