இதுவரை வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் 11 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு!
இதுவரை இந்தியா முழுவதும் வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்தும் 11 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, வைரஸ் தொற்றை தடுக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்ததால், இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளிலேயே சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் வந்தே பாரத் எனும் திட்டத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் இல்ல இந்தியர்கள் இந்தியாவுக்கு கூட்டி வரப்பட்ட கொண்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் இதுவரை 22 நாடுகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் 11 லட்சத்து 20 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான அனுராக் ஸ்ரீவஸ்தவா அவர்கள் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 375 விமானங்களை இயக்க திட்டமிட்டு உள்ளதாகவும், கூடுதலாக 18 நாடுகளுடன் விமானப் போக்குவரத்தை தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.