பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசியன் ஏஜ் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பொறுப்புகளில் பணியாற்றியவர் எம்.ஜே.அக்பர். இவர் பத்திரிகை பணியை கைவிட்டு பாஜகவில் இணைந்து செயல்பட்டார். தமது அமைச்சரவையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரின் முகம் வேண்டும் என்பதால் எம்.ஜே.அக்பரை, பிரதமர் மோடி வெளி யுறவுத்துறை இணை அமைச்சராக்கினார்.
இந்நிலையில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க பதிவாக கஜாலாவஹாப் என்ற பெண், மோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது புகார் கூறி, பதிவு செய்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்த விபரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.கஜாலா வஹாப்பை தொடர்ந்து பல்வேறு தருணங்களில் அக்பருக்கு கீழ் பணியாற்றிய 11 பெண் பெண் பத்திரிகையாளர்கள், அக்பர் தங்களிடமும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.
இதில் குறிப்பிடத்தக்க பதிவாக கஜாலாவஹாப் என்ற பெண், மோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது புகார் கூறி, பதிவு செய்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்த விபரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.கஜாலா வஹாப்பை தொடர்ந்து பல்வேறு தருணங்களில் அக்பருக்கு கீழ் பணியாற்றிய ஆறு பெண்கள், அக்பர் தங்களிடமும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த சிஎன்என் பத்திரிக்கையாளரான மஜ்லி டி புயு காம்ப் என்பவர் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது புகார் ஒன்றை தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திரிக்கையாளரான மஜ்லி டி புயு காம்ப் வெளியிட்ட பதிவில்,நான் 18 வயதாக இருந்தபோது அக்பரின் கீழ் பணியாற்றினேன் .அப்போது அவர் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். அதாவது எனது நன்றியை தெரிவிப்பதற்காக அவருக்கு கையை நீட்டினேன். ஆனால் 55 வயதான அக்பர் தனது நாக்கை, 18 வயதான எனது வாயில் வைத்து முத்தமிட்டு விட்டார் என்று பரபரப்பு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கட்சி ரீதியாக விசாரிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சலில் ராஜினாமா கடிதத்தை எம்.ஜே.அக்பர் அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…