நாடு முழுவதும் 1 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் – மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஒரு வருட காலமாக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவின் இதன் பாதிப்பு தற்போது சற்றே குறைந்து வருகிறது. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டறியப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கொடுத்துள்ளது.
எனவே, கடந்த மாதம் 16ம் தேதி முதல் இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து முதல் கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடப்பட்டு ஒரு மாதங்கள் ஆகி உள்ள நிலையில் இதுவரை நாடு முழுவதும் 1,01,88,007 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அதிக தடுப்பூசி போட்டுக் கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.