இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸை அளிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், உலக அளவில் கொரோன அவைரஸ் பாதிப்பில், அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ள நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், ஒரே நாளில் 57,981 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 26,47,664-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 57,584 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 941 பேர் உயிரிழந்துள்ளனர்.