மத்திய அரசு அறிவிப்பு .! மாநிலங்களுக்கு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.!
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இந்தியாவில் 5865 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் அதிகமாக மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் பாதித்துள்ளது.
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு, ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தமாக ரூ .11,092 கோடியை ஒதுக்கியது. அந்த நிதி ஒதுக்கீட்டில் மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு பணம் ஒதுக்காமல் மாறாக மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு பணம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அதற்கு ஏற்றாற்போல மஹாராஷ்டிராவிற்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.510 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.குறைவாக பாதிக்கப்பட்ட உத்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு 900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதால் கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா.? என்ற கேள்வியை எழுப்பினர்.மேலும் இது குறித்து மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையெடுத்து இன்று கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.