சரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை 10 ஆயிரமாக அதிகரிக்க முடிவு.?
சபரிமலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கையை 10 ஆயிரமாக அதிகரிக்க கேரள தலைமை செயலர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கொரோனா காரணமாக சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை வார நாட்களில் தற்போது 1,000 முதல் 2,000 ஆகவும், வார இறுதி நாட்களில் மற்றும் விடுமுறை நாட்களில் 2,000 முதல் 3,000 ஆகவும் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில, தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் (டி.டி.பி) கோரிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் புனித யாத்திரை குழுவின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், அந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை எதிர்ப்பு தெரிவித்தாலும், மெஜாரிட்டி அடிப்படையில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.