ஊரடங்கு முடிந்த பின் அதிக கவனம் தேவை -பிரதமர் மோடி
ஊரடங்கு முடிந்த பின் அதிக கவனம் தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அவர் பேசுகையில்,ஊரடங்கு தளர்வு 2 விஷயங்கள் மிக முக்கியமானவை.கொரோனாவை வீழ்த்தவேண்டும் மற்றொன்று பொருளாதார நடவடிக்கை எடுக்கப்படும்.
முக கவசம் அணிய வில்லை என்றாலோ அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றாலோ, உங்கள் உயிரை மட்டுமின்றி மற்றவர்களின் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு அதிகம் உள்ளது .கொரோனா வைரஸ் நாம் வாழக்கூடிய சூழ்நிலையை நிச்சயமாக மாற்றியிருக்கிறது.ஊரடங்கு முடிந்து சகஜ நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கும் சூழலில் அதிக கவனம் தேவை என்று பேசினார்.