Categories: இந்தியா

Morbi Bridge Collapse; குஜராத்தில் நாளை துக்க தினம் அனுசரிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

மோர்பி தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததால் குஜராத் மாநிலம் முழுவதும் நாளை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விழுந்து 134 பேர் உயிரிழந்ததை அடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் நாளை (நவம்பர் 2) துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் தொங்கும் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள மோர்பி தொங்கும் பாலம் விபத்தில் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொங்கும் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடி இன்று நேரில் சந்திக்க உள்ளார். பிரதமர் வருகையையொட்டி மோர்பி சிவில் மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பூபேந்திர படேல் தலைமையிலான குஜராத் அரசு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 2) மாநிலம் தழுவிய துக்கம் அறிவித்துள்ளது.

இந்த பெரும் சோகத்திற்கு பிந்தைய நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், நவம்பர் 2-ஆம் தேதி மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசிய கொடி மாநிலத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், மேலும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி எதுவும் நடத்தப்படாது என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அமெரிக்க அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்விக கிராமத்தில் சிறப்புப் பூஜை!

அமெரிக்க அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்விக கிராமத்தில் சிறப்புப் பூஜை!

திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…

2 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (06/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

2 hours ago

“2026 தேர்தலில் திமுக கூட்டணி தான்., ” திருமாவளவன் திட்டவட்டம்.!

திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…

2 hours ago

“தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட்” ..இன்று 4 மாவட்டத்துக்கு கனமழை…வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…

3 hours ago

“ஒரே மேடையில் தவெக தலைவர் விஜயுடன் நான்.?” திருமா உடைத்த ரகசியம்.!

திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…

3 hours ago

சாம்பியன்ஷிப்பை விடுங்கள் ஆஸ்திரேலிய தொடர் மீது கவனம் செலுத்துங்கள் – அட்வைஸ் கொடுக்கும் சுனில் கவாஸ்கர்!

மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…

3 hours ago