பருவமழை தாமதமாக தொடங்கும்.! வானிலை மையம்.!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 01-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 05-ம் தேதி தாமதமாக தொடக்க வாய்ப்பு உள்ளது.
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி காணப்படும். இந்த அறிகுறிகள் கொண்டு தான் கேரளாவில் பருவமழை தொடங்கும். வழக்கமாக இந்த அறிகுறி மே மாதம் 20-ம் தேதிக்கு மேல் உருவாகும்.
ஆனால் இந்த ஆண்டு 6 நாட்களுக்கு முன்பே அந்தமான், நிகோபார் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால், கேரளாவில் ஜூன் 1-ம் தேதி பருவ மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில், கேரளாவில் தாமதமாக தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 01-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 05-ம் தேதி தாமதமாக தொடக்க வாய்ப்பு உள்ளது. இதனால், கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாள்கள் தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை தென் கிழக்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ஆம்பன் புயலால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பால் அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.