உத்தரபிரதேசத்தில் 4 மாத பச்சிளம் குழந்தையை கொன்ற குரங்குகள் !
உத்தரபிரதேசத்தில் 4 மாத பச்சிளம் குழந்தையை 3வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொன்ற குரங்குகள்.
உத்தரபிரதேசத்தில் பரேய்லில் 4 மாத பச்சிளம் குழந்தையை குரங்குகள் தூக்கிச்சென்று 3வது மாடியிலிருந்து தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரேய்லியில் மாநிலத்தில் உள்ள துங்கா கிராமத்தில் வசித்து வருபவர் நிர்தேஷ் உபாத்யயா. இவருக்கு 4 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று நிர்தேஷ் தனது குழந்தையுடன் மொட்டை மடியில் நின்று கொண்டிருந்த போது அவரை குரங்குகள் தாக்கியுள்ளது. அப்போது கைதவறி குழந்தையை குரங்குகள் எடுத்து சென்று 3வது மாடியிலிருந்து தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி சமீர் குமார் கூறுகையில் “மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இருந்து குரங்குகளை விரட்ட வனத்துறை முயற்சி செய்து வருகிறது. இதற்கு உள்ளூர்வாசிகளும் குரங்குகளை விரட்ட உதவி செய்யுமாறு” காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளார்.