ஆப்ரிக்காவில் பரவும் குரங்கு அம்மை! இந்தியாவில் தீவிரமாகும் தடுப்பு நடவடிக்கை!
ஆப்பிரிக்கா : பரவி வரும் குரங்கம்மை தொற்றுக்கு முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் தடுப்பு நடிவடிக்கைள், கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிரிக்கா நாட்டில் தற்போது பரவி வரும் குரங்கம்மை எனும் MPox தொற்று உலக சுகாதார அமைப்பிற்கு அடுத்த கட்ட தலைவலியாக இருந்து வருகிறது. கடந்த 2020,2021 என இரண்டு வருடங்கள் உலகம் முழுவதும் பரவி ஒரு பேரிடராக இருந்து வந்தது. அதன்பின் அதற்கான தடுப்பு ஊசிகள் கண்டறிந்து அவற்றின் பாதிப்பை படிப்படியாகக் குறைத்தார்.
இருந்தாலும் அதன் பாதிப்பு தற்போது வரையில் ஆங்காங்கே நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த MPox-ஆல் மீண்டும் ஒரு கொரோனவாக, மீண்டும் உலகம் முழுவதும் ஊரடங்கு நிலை ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு இது பரவும் வேகம் அதிகரித்து வருகிறது.
குரங்கு அம்மை பாதிப்பு ..!
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் இந்த குரங்கு அம்மை தொற்று நோயின் பாதிப்பையொட்டி உலக சுகாதார மையம் (WHO) கடந்த 14-ம் தேதி உலக சுகாதார அவசர நிலையை அறிவித்தது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே கடந்த 2022 முதல் தென்பட்ட இந்த தொற்று நோய், இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் படிப்படியாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதனால், சிங்கப்பூரில் 10 பேர் இந்த குரங்கு அம்மை தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டிலிருந்து தற்போது வரையில், 110 நாடுகளுக்கும் மேல் கிட்டத்தட்ட 99,176 பேர் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 208 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த பாதிப்பு தீவிரம் அடைவதால் அதற்கான முன்னேற்பாடுகளை உலக நாடுகள் எடுத்து வருகிறது.
இந்தியாவில் பாதிப்பும், தடுப்பு நடவடிக்கைகளும் ..!
கடந்த 2022 ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் மொத்தம் 30 பேருக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதன்பிறகு கடந்து சென்ற இந்த மார்ச் மாதத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த பாதிப்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் யாருக்கும் இதுவரை பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது, இந்த தொற்று தொடர்பாக எங்கும் இது வரை எந்த பாதிப்பும் பதிவாகவும் இல்லை. மேலும், இந்த குரங்கு அம்மை தொற்று நோய் பரவக் கூடிய பாதிப்பு இந்தியாவுக்கு இல்லை எனவும் கூறுகிறார்கள்.
இருப்பினும் கொரோனா போல எந்த ஒரு தீவிரமும் அடையாமல் இருப்பதற்கு மத்திய அரசு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், இந்த நோய்த் தொற்றை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு, விமான நிலையங்களில் பயணிகளுக்கானப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு வேளை குரங்கு அம்மை தொற்று பாதிக்கப்பட்டிருப்பது கண்டறிந்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கவும் டெல்லியில் மூன்று அரசு மருத்துவமனைகள் தயாரான நிலையில் இருக்கிறது. மேலும், ஒவ்வொரு மாநிலங்களிலும் குரங்கு அம்மை நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை மாநில அரசுகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இதனால், அனைத்து சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்களில் மருத்துவக் குழுவினர் தயாரான நிலையில் உள்ளனர். மேலும், இந்தியாவில் உள்ள 32 ஆய்வகங்களில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டும் வருகிறது.