இந்திய தூதராக சுவிட்சர்லாந்தில் மோனிகா கபில் நியமனம்!

சுவிட்சர்லாந்து நாட்டின் இந்திய தூதராக மோனிகா கபில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் மோனிகா கபில் என்பவர் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சுவீடன் நாட்டின் தூதராகவும் இருந்துள்ளார். இது மட்டுமல்லாமல் போலந்து லித்துவேனியா ஆகிய நாடுகளிலும் இந்திய தூதராக பணியாற்றி அனுபவம் கொண்ட இவர், கடந்த 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இங்கு பணியாற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பிரான்ஸ், நேபாளம், தாய்லாந்து ஆகிய இடங்களிலும் இவர் நிரந்தர குழுவில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளி விவகார அமைச்சகத்தின் செயலாளர் பதவியில் உள்ள மோனிகாவை ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கான இந்தியத் தூதராக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025