பாடகர் மீது குவிந்த பணமழை..! வைரலாகும் அசத்தல் வீடியோ..!
குஜராத்தில் நாட்டுப்புற பாடகர் மீது மக்கள் பணமழை பொழியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத்தின் வல்சாத் என்ற இடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், குஜராத்தி நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வி மீது மக்கள் பணத்தை வீசும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. வல்சாத்தில் நேற்று வல்சாத் அக்னிவீர் கவு சேவா தளம், சிறப்பு பஜனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
அந்த நிகழ்ச்சியில் மற்ற இசைக்கலைஞர்களுடன் குஜராத்தி நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வியும் கலந்துகொண்டு மேடையில் அமர்ந்து பாடினார். இவர் “நாகர் மே ஜோகி ஆயா” மற்றும் “கோரி ராதா நே காலோ கான்” ஆகிய பிரபலமான பாடல்ககளை பாடியுள்ளார். நிகழ்ச்சியில் அவரது பாடலுக்கு அங்கிருந்த பார்வையாளர்கள் அவர் மீது 10 ரூபாய் முதல் 100 ரூபாய் நோட்டுகளை மழை போல பொழிந்தனர். அதில் மேடை முழுவதும் பணத்தால் மூடப்பட்டது.
இந்த மொத்தத்தொகை ஒரு சமூக காரணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அதாவது, உடல்நிலை சரியில்லாத மற்றும் நகர முடியாத பசுக்களுக்கு சேவை செய்ய நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் இந்த பணம் அனைத்தும் அக்னிவீர் கவு தொண்டுக்கு செல்கிறது. என்று காத்வி கூறினார்.
பஜனை நிகழ்ச்சிகளில் மக்கள் லட்சக்கணக்கில் பணமழை பொழிவது இது முதல் முறையல்ல. டிசம்பர் 2022 இல், குஜராத்தின் நவ்சாரி கிராமத்தில் நடந்த பஜனை நிகழ்ச்சியில் திரு காத்விக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள் அவர் மீது வீசப்பட்டதும், இதே போன்ற வீடியோக்கள் 2017 மற்றும் 2018 இல் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.
#WATCH | People showered money on singer Kirtidan Gadhvi at an event organised in Valsad, Gujarat on 11th March pic.twitter.com/kH4G1KUcHo
— ANI (@ANI) March 12, 2023