அந்நிய செலாவணி மோசடி வழக்கு: பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன்
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சோனியா காந்தியின் மருமகனும் , பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதோரா சட்ட விரோதமாக லண்டனில் சொத்து வாங்கி, சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் ராபர்ட் வதோரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் ஏற்கனவே பலமுறை அமுலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தது.
நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளை பாரதீய ஜனதா கட்சியும் , மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து வலுவான கூட்டணி மற்றும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் அரசியல் தொடர்பு இல்லாமல் இருந்த பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பதவியை வழங்கியது.
ஆனால் ஒரு புறம் காங்கிரஸ் கட்சியில் மக்களவை தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் சோனியா காந்தியின் மருமகன் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கியிருந்தது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.ஆனால் பாஜக இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி வந்தது.
இந்நிலையில் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.