சிபிஐ எதிராக மம்தா போர்க்கொடி…….எங்கள் மாநிலத்திலும் சிபிஐ நுழைய கூடாது……..மோடியின் அஸ்திரத்தை சுக்குநூறாக உடைத்து..! துரத்த களமிரங்கும் எதிர்கட்சிகள்..!!!அதிர்ச்சியில் மத்தி..!!

Default Image

மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் சிபிஐ.க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

 சிபிஐ எங்கள் மாநிலத்தில் வேண்டாம்…அதற்கு தடை….போர்கொடி தூக்கும் டெல்லி,மேற்குவங்கம்,ஆந்திரா… 

Image result for MAMTA AGAINST MODI

மத்தியில் ஆளும் பாஜக சிபிஐ வைத்து மற்ற மாநிலங்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வரும் மத்திய அரசுக்கு எதிராக ஏய் என்று குரல் கொடுத்தால் உடனே சிபிஐ ரெய்டு,ஐடி ரெய்டு என்று சிபிஐ வைத்து மாநிலங்களை மிரட்டுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் சிபிஐ.க்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்வது பற்றி பாஜக அல்லாத அனைத்து மாநிலங்களும் பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது,மேலும் பாஜக ஆளும் சில மாநிலங்களும் கூட சிபிஐ.க்கு அனுமதி வழங்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சிபிஐ வைத்து மிரட்டும் மத்திய அரசின் இந்த விவகாரத்தால் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே அதிகார மோதல் ஏற்படும் அபாயம் உருவாகும் ஆகையால் எதிர்க்கட்சி ஆளும் மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகளும் சிபிஐ குறித்து பரிசீலனை செய்வதாக தகவல்கள் கசிகின்றன.

Image result for MODI CBI

தன்னுடைய மாநிலத்துக்குள் உள்ளே சிபிஐ நுழைய ஆந்திர அரசு தடை விதித்து மத்தியில் ஆளும் அரசுக்கு  இடியை பரிசளித்தது. இதனை தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சிபிஐ.க்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். சிபிஐ. தடை செய்த ஆந்திரா அரசை போன்று அதிரடி நடவடிக்கையை எடுப்பது குறித்து பாஜக இல்லாத மற்ற மாநில அரசுகளும் அதிதீவிரமாக பரிசீலனை செய்து வருகின்றது.

நாட்டில் உள்ள மாநிலங்களின் இந்த நடவடிக்கைகளால் மத்திய அரசு அதிர்ச்சியில் உறைந்துள்ளது மத்தியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா ஏன் சிபிஐயை  மாநிலத்தை விட்டு துரத்தியது…???

ஏன் துரத்தியது என்றால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் அதை மத்திய அரசு மறுக்கவே பாஜகவில் தலைமையின் கீழ் செயல்படும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அதிரடியாக கடந்த மார்ச் மாதம் விலகியது.

Image result for CHANDRABABU AGAINST CBI

இதனிடையே இதற்கு தனது கோபத்தை வெளிபடுத்தும் விதாக தெலுங்கு தேசம் கட்சிக்கு மிக நெருங்கிய வட்டாரத்தை குறிவைத்து அவர்களின் நிறுவனங்களில் வருமான வரித்துறையும், சிபிஐயும் சோதனை நடத்தியது. இது சந்திரபாபு நாயுடுவை கடுப்பெத்தியது.இதனால் நாயுடுவின் கடும் கோபத்தை சம்பாதித்து கொண்டது பாஜக. இதனால் கடும் கோபத்தின் உச்சத்தில் இருந்த நாயுடு ஆந்திராவில் இனிமேல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் போது ஆந்திர போலீஸ் பாதுகாப்பு அளிக்காது என்று அதிரடியாக அறிவித்தார். வம்புக்கு இழுத்த வருமானத்துறையை வாயடைக்க வைத்தார் நாயுடு.இந்நிலையில் சிண்டிய சிபிஐ விட்டு வைக்கவில்லை சிபிஐ மாநிலத்தை விட்டு துரத்தியுள்ளார்.எப்படி என்றால் தனது மாநிலத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை எடுப்பதற்காக வழங்கி இருந்த பொது அனுமதி சந்திரபாபு தலைமயிலான ஆந்திர அரசு கடந்த 8ம் தேதி அதிரடியாக ரத்து செய்தது என்று தகவல் ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில் இந்த ரகசிய தகவல் நேற்று முன்தினம் தான் பொது வெளிக்கு வெளியானது. மேலும் சீண்டி பார்த்த சிபிஐயை மாநில அரசு அனுமதி அளிக்கும் அரசாணையை ரத்து செய்து அதிரடியாக புதிய அரசாணையையும் ஆந்திர அரசு பிறப்பித்துள்ளது.அம்மாநில சந்திரபாபு நாயுடுவின் இந்த பாய்ச்சல் நடவடிக்கை பாஜக இடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் முன்பே சிபிஐ குறித்து நாயுடு அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக சிபிஐ மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது என  தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த அதிரடி ரத்தை பாஜகவிற்கு எதிராக எடுத்துள்ளார்.

Image result for CHANDRABABU AGAINST CBI

இந்நிலையில் நாயுடுவின்  இந்த நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும்  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பாஜக இல்லாத பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் ஆதரவு கரத்தினை நீட்டி அவர்களும் இந்த நடவடிக்கையை பின்பற்றி தங்கள் மாநிலத்திலும் உள்ள சிபிஐக்கு அளித்துள்ள ஒப்புதலை ரத்து செய்து துரத்துவது பற்றி தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.இதே போல் கர்நாடக அரசு சிபிஐ அளித்த ஒப்புதலை ரத்து செய்து விட்டதாக தகவல் கசிந்த வண்ணம் உள்ளது. ஆனாலும் இது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Image result for kejriwal AGAINST MODI

மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் இதேபோல் தான் ஒப்புதலை ரத்து செய்யும் நடவடிக்கையை தொடங்கி விட்டார் என்ற தகவல் வந்த வண்ணம் உள்ளது.இதனை உறுதிபடுத்தும் விதமாக எங்கள் மாநிலத்துக்குள் சிபிஐ.யை அனுமதிக்க மாட்டோம் என்று அவர் நேற்று அறிவித்தார்.

Image result for MAMTA AGAINST MODI

மாநில அரசுகளின் இந்த நடவடிக்கை மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி பீதியடைய செய்துள்ளது.சிபிஐ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்துமே மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக திரும்பியுள்ளதால் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சிபிஐ தன் பணிகளை பல்வேறு மாநிலங்களில் சில முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறது.சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மற்றும் தங்கள் மாநிலத்துக்குள் நுழைய மாநில அரசுகள் தடை விதித்தால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மிகப்பெரிய ஒரு அரசியலமைப்பு சட்ட மோதல் மற்றும் அதிகார மோதல் தலைத்தூக்க வாய்ப்புள்ளது.

சுதாரித்து கொண்ட சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு…!!

Image result for cbi supreme court

இத்தகைய பிரச்சணை வரும் என்றே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.சிபிஐ அமைப்பு இது டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டத்தின் கீழ்  1946’ன் படி 6வது பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.இதன் செயல்பாடு இந்த சட்டப்பிரிவுகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது.அதன்படி பார்த்தால் டெல்லிக்கு வெளியே  எந்தவொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தை ஆளும் அரசுகளின் அனுமதி இல்லாமல் சிபிஐ.யால் நேரடியாக விசாரணை நடத்தவோ அல்லது மாநில பாதுகாப்பின்றி செயல்பட முடியாது. இந்நிலையில் தான் சிபிஐ தனது சுதந்திரமான விசாரணைக்கு 1946 ன் கட்டுப்பாடு தடையாக இருக்கிறது இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த  2013ம்  ஆண்டு சிபிஐ நாடியது. அப்போது சிபிஐ தாக்கல் செய்த மனுவில் அதற்கு ஆதரவாக 10 மாநில அரசுகள் மட்டுமே சிபிஐ நடவடிக்கை  எடுக்க அனுமதி அளித்தது.இந்நிலையில் அனுமதி அளிக்காத மற்ற மாநிலங்களில் விசாரணை நடத்த, வழக்குகளின் அடிப்படையில் அனுமதி பெற வேண்டியுள்ளது என கூறிய போது. உச்சநீதிமன்றம் அதற்கு எந்த மாநிலத்திலும் எந்த வழக்கையும் விசாரிக்கும்படி சிபிஐ.க்கு உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியும். அப்படி உத்தரவிட்டால் அது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதியின்றி சிபிஐ.யால் நேரடியாக விசாரணை நடத்த முடியும். அதற்கு, மாநில அரசும் ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்தனர்.

Image result for BJP

இந்நிலையில் சிபிஐ மாநிலத்தில் இருந்து துரத்திய ஆந்திரா திட்டக்குழுவின் துணைத் தலைவர் குடும்மா ராவ் பேசுகையில் பாஜக ஆளும் மாநிலத்தில் சிபிஐ.க்கு அனுமதி இல்லை மேலும் நாட்டில் 10 மாநிலங்களை தவிர மற்ற எந்த மாநிலத்தில் சிபிஐக்கு ஒப்புதல் கூட இதுவரை வழங்கப்படவில்லை.ஏன் பாஜக ஆளுகின்ற சட்டீஸ்கர், அரியானா, மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலத்தில் கூட சிபிஐக்கு அனுமதி இல்லை. இதை சிபிஐ உச்ச நீதிமன்றத்திலேயே தெரிவித்த பின் ஏன் ஆந்திரா அர்சின் இந்த நடவடிக்கைக்கு பாஜக ஏன் கூப்பாடு போடுகிறது என தெரியவில்லை என்று கூறினார்.

Related image

இதற்கிடையே சிபிஐக்கு எதிரான மாநிலங்களின் நடவடிக்கைக்கு சிபிஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் கூறுகையில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டால் மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ தனது விசாரணையை எந்த மாநிலத்திலும் நடத்த முடியும் என்பது உண்மை தான் ஆனால் அதே சமயம் சிபிஐக்கு எதிராக தடை விதிக்கும் மாநிலங்களின் இதுபோன்ற அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டால் சிபிஐயின் வழக்கு விசாரணைகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும் இது நாட்டுக்குத்தான் பெரிய இழப்பு என்றார் கூறியுள்ளார்.

மேலும் சிபிஐ விசாரனைக்கு  மாநில அரசுகள் மற்றுத்தால்  நீதிமன்றத்தை அணுகி பின் அதற்கான  அனுமதி பெற்று சிபிஐ விசாரிக்க முடியும். விசாரிக்க அனுமதி இருந்தாலும் விசாரணைக்கு மாநில போலீசாரின்  ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு மிகவும் அவசியாம தேவை என்பதால் இதனை மாநில அரசுகள் மறுக்கும் பட்சத்தில் சிபிஐ பல்வேறு சிக்கல்களை சந்திக்க  நேரிடும்.மேலும் மாநிலங்களின் சிபிஜக்கு எதிராக இந்த நடவடிக்கையால் மாநிலத்தில் ஊழல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளாதாக சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் லக்ஷ்மி நாராயணன் கூறியுள்ளார்.ஆனால் இது குறித்து தெரிவிக்கும் எதிர்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக சிபிஜயை தனது அஸ்திரமாக பயன்படுத்திவருகிறது என்று குற்றம் சாட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்