மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண் மாவோயிஸ்ட் சரண்டர்… மறுவாழ்விக்கு ஏற்பாடு…

- பல்வேறு குற்ற செயலில் ஈடுபட்ட மாவோயிஸ்டு சரண்டர்.
- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைந்தார்.
ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் கமர்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஓர் இளம்பெண் தீவிரவாத இயக்கத்தில் இருந்து மீண்டுள்ளார். கர்மபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆத்மி மத்கமி (22). இவர் கடந்த 2015-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். இதையடுத்து, ஆத்மி மத்கமி கொலை, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரது தலைக்கு 2 லட்ச ரூபாய் சன்மானமாக அரசால் அறிவிக்கப்பட்டது.
காவல்துறையினரின் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மாவோயிஸ்ட் மத்கமி இன்று மல்கங்கிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைந்தார்.இவர் ஆயுதங்களை கைவிட்டு மனம் திருந்தி சரணடைந்ததால் அவருக்கு மாநில அரசு வழங்கும் மறுவாழ்விற்காக உதவிகள் வழங்கப்படும் என அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025