மத்திய பிரதேச முதல்வராக பதவியேற்றார் மோகன் யாதவ்..!

Mohan yadav

சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு மாநில முதல்வராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று லால்டுஹோமா முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பழங்குடியினத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு தடுப்பூசி முகாம் டிச.13ம் தேதி முதல் டிச.30 ஆம் தேதி வரை நடைபெறும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இவர், கடந்த சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசில் மோகன் யாதவ், கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இந்த நிலையில், இன்று மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றார். ஜகதீஷ் தேவ்டா மற்றும் ராஜேஷ் சுக்லா துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

இவர்களுக்கு  ஆளுநர் மங்குபாய் சி.படேல்  பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்