ஒடிசா : புவனேஸ்வரில் நடைபெற்ற இன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் மாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒடிஷாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிந்தது. இதில், 25 ஆண்டுகால ஆட்சி செய்த நவீன் பட்நாயக்கின் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்தி பாஜக அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் ஒடிஷா முதல்வராக மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனெவே 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒடிசாவின் துணை முதல்வராக கே.வி.சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். நடந்து முடிந்த (2024) சட்டமன்றத் தேர்தலில், ஒடிசாவில் உள்ள 147 இடங்களில் 78 இடங்களை கைப்பற்றி தனிபெரும்பான்மை பெற்றது. இந்நிலையில், 25 ஆண்கள் கழித்து ஒடிசாவில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…