மொஹாலி கண்காட்சி: “ஸ்பின்னிங் ஸ்விங் டிராப் டவர் ” கீழே விழுந்ததில் 10 பேர் படுகாயம்!
பஞ்சாபின் மொஹாலியில் உள்ள கேளிக்கை பூங்காவில் “ஸ்பின்னிங் ஸ்விங் டிராப் டவர் ” சவாரி திடீரென கீழே விழுந்ததால் குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், சுமார் 50 அடி உயரத்தில் இருந்து ஊஞ்சல் கீழே விழுந்து, 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்களும் அடங்குவர். காயமடைந்த 5 பேர் சிவில் மற்றும் மற்ற 5 பேர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொஹாலி விபத்து வீடியோ
Spinning swing falls down abruptly in Dushera grounds of Phase-8 in Mohali, Punjab. Over 16 injured, including children. Rushed to the hospital. This is unacceptable. Hope the owner of the swing is arrested. And who from Punjab Govt gave safety approvals? pic.twitter.com/e9bCUOuoLo
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 4, 2022
கிடைத்த தகவலின்படி, மொஹாலியின் எட்டாம் கட்ட துஷேரா மைதானத்தில் லண்டன் பாலம் என்ற பெயரில் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் கண்காட்சிக்கு வந்திருந்தனர். டிராப் டவரில் சுமார் 30 பேர் இருந்தனர். சுமார் 50 அடி உயரத்தில் சுழன்று கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அதிக விசையுடன் கீழே இறங்கியது.
டிராப் டவர் ஆபரேட்டர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் எஸ்டிஎம் சரப்ஜித் கவுர் மற்றும் நைப் தாசில்தார் அர்ஜுன் கிரேவால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இதில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிசி அமித் தல்வார் தெரிவித்தார்.