1000 கோடி! ஃபானி புயல் பாதித்த ஒடிசா மாநிலத்திற்கு மத்திய அரசு அறிவிப்பு!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வெள்ளிக்கிழமை அன்று கரையை கடந்தது. கரையை கடக்கும் போது, ஒடிசாவில் புரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 வருடங்கள் இல்லாத அளவிற்கு மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் புயல் அடித்து சுற்று வட்டார பகுதியை சூறையாடியது.
இந்த பலத்த சேதத்தையும் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடவும் பிரதமர் நரேந்திர மோடி, பார்வையிட ஒடிசா வந்தடைந்தார்.அவரை ஒடிசா ஆளுநர், முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் வரவேற்றனர். பிறகு தனி ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிட்டு வருகிறார்.
புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தற்போது ஒடிசா மாநிலத்திற்கு நிவாரண நிதியாக 1000 கோடி ருபாய் ஒதுக்கியுள்ளார். ஒடிசா மாநிலத்துக்கு ஏற்கனவே மத்திய அரசு 381 கோடி அறிவித்திருந்தது குறிப்பிட தக்கது.
DIASUVADU