ரபேல் போர் விமானம் வாங்கும் உடன்படிக்கையில் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைப்பதற்காக பாதுகாப்பு துறையையும் மீறி பிரெஞ்ச் நிறுவனத்துடன் பிரதமர் அலுவலகத்தில் நேரடியாக பேச்சு நடத்தியதாக ஆங்கில நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை ராகுல்காந்தி காண்பித்து விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது ரபேல் போர் விமானம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகளுடன்பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் மோடி பிரெஞ்சு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழில் வெளியானதை காண்பித்து ராகுல்காந்தி பேட்டியளித்தார்.
அப்போது ராகுல்காந்தி தெரிவிக்கையில் ரபேல் போர் விமானம் வாங்கிய ஊழலில் பிரதமரின் தலையீடு இருப்பதாக நான் ஓராண்டு காலமாக தெரிவித்து வருவதாகவும் இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நாளிதழில் வெளியாகி இருக்கிறது மோடி கள்வனா அல்ல காவலான தெரிவிக்க வேண்டுமென என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.